செங்கோல் எதிர்ப்புக்கு உ.பி. முதல்வர் தமிழில் கண்டனம்!
செங்கோல் மீதான எதிர்ப்பு தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் ஆர்.கே.செளத்ரி நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும். செங்கோலுக்குப் பதில் அரசியலமைப்பின் பிரதியை அங்கு வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ள உத்தர பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், “செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய நாட்டின் வரலாறு, கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதும் மதித்ததில்லை. செங்கோல் பற்றிய சமாஜ்வாதி முக்கிய தலைவர் தெரிவித்துள்ள கருத்து கண்டனத்துக்குரியது. அதுமட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.
-