ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரம்!!
ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-10-24 14:20 GMT
chennai flights cancelled
ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தொடர் கதையாகி வரும் வெடிகுண்டு மிரட்டலால் விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால், விமானத்தில் பயணிக்க அச்சம் ஏற்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.