தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை - பிரியங்கா காந்தி!
Update: 2024-04-24 08:20 GMT
தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை என பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
''எனது பாட்டி தனது தங்க நகைகளை போருக்காக தியாகம் செய்தார்.
எனது தாய் தனது தாலியை இந்த நாட்டிற்காக தியாகம் செய்தார்.
60 ஆண்டுகளில் காங்கிரஸ் யாருடைய தாலியையும் பறிக்கவில்லை.
உங்களது தாலியையும் தங்கத்தையும் உங்களிடமிருந்து பறிக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக கடந்த 2 நாட்களாக சிலர் கூறி வருகின்றனர்.
பெண்களின் வலியையும், போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற முட்டாள்தனமான கூற்றை சிலர் வெளியிடுகின்றனர்.''
என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.