கேரளாவில் தென் மேற்கு பருவமழை - தமிழகத்தை தாக்குமா?

Update: 2024-05-31 08:17 GMT

 தென் மேற்கு பருவமழை

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 12 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் இரு தினங்களுக்கு முன்பாக நேற்று தென்மேற்குபருவமழை தொடங்கியுள்ளது. கேரளாவில் மழை பொழிவு தீவிரமடைந்து வருகிறது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு திசையில் இருந்து பலத்த காற்றின் தாக்கம் மற்றும் அரபிக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி காரணமாக, வரும் நாட்களில் மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிக அலைகள் மற்றும் புயல் வீச வாய்ப்புள்ளதால், தெற்கு கேரள கடற்கரை மற்றும் லட்சத்தீவுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஜூன் 3 தேதி வரை மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜூன் 3ம் தேதி வரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும், 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News