தனக்கு அனுப்பிய சமன் சட்டவிரோதமானது - அரவிந்த் கெஜ்ரிவால்

Update: 2024-02-22 10:23 GMT

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக இதுவரை ஆறு முறை சம்மன்கள் அனுப்பப்பட்டன. இதுவரை அனுப்பப்பட்ட சம்பந்தங்கள் எதற்கும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை பெருநகர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் 17.02.2024 நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது.

இதனிடையே டெல்லி சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டுத்தொடர் நடைபெற இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது தீர்மானம் நடைபெற இருப்பதாகவும் இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு விலக்கு அளித்தது.

இந்நிலையில் தனக்கு அனுப்பிய சமன் சட்டவிரோதமானது. அதனை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே தற்போது ஏழாவது முறையாக அமலாபத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமன் அனுப்பியுள்ளது அதில் வரும் 26 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News