9 மாதங்கள் கழித்து பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் ..! 8 நாள் பயணம் என்பது 9 மாதங்களாக காரணம் என்ன ?

Update: 2025-03-19 10:12 GMT
9 மாதங்கள் கழித்து பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் ..! 8 நாள் பயணம் என்பது 9 மாதங்களாக காரணம் என்ன ?

சுனிதா வில்லியம்ஸ் 

  • whatsapp icon

கடந்த 9 மாதங்களாக நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் ..! 

விண்வெளியில் உள்ள நாசாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு நாசா சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனியா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சென்றனர்.

அவர்கள் சுமார் 8 நாட்கள் பயணமாக சென்றிருந்த நிலையில் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கலால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை இருந்தது.

இதனால் அவர்களின் 8 நாள் பயணம் என்பது 9 மாதங்களாக விண்வெளியிலேயே நீடித்தது. இதைத் தொடர்ந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸையும் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் அரசு முயற்சி செய்தது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 எனும் ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.


இன்று காலை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வந்தது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் . 


#nasalive #sunitawilliams #nasalivestream #spacex #sunitawilliams #falcon9 #spacexlaunch 


Similar News