டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

Update: 2024-06-26 11:50 GMT

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்ததில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் பரப்புரைக்காக இடைக்கால ஜாமினில் வெளியே வந்த இவர், கடந்த 2 ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கில்  டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தனது இறுதித் தீர்ப்பை நேற்று (ஜூன் 25) வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், “அமலாக்க இயக்குநரகம் சமர்ப்பித்த பதிவில் உள்ள உள்ளடக்கத்தை விசாரணை நீதிமன்றம் சரியான முறையில் கவனிக்கவில்லை. இந்த வழக்கில் வாதிட போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அமலாக்க இயக்குநரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Tags:    

Similar News