கோவில்- மசூதி தொடர்பாக வழக்கு தொடர தடை: உச்சநீதிமன்றம்

கோவில்- மசூதி தொடர்பாக வழக்கு தொடர தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-12-13 08:56 GMT

supreme court

இந்தியாவில் வழிபாட்டு தலங்களை சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதிக்குப்பின் மாற்ற முடியாது என்ற சட்டத்தை எதிர்த்து சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991-ன் அரசியலமைப்பை எதிர்த்து பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரணை நடைபெற்று, முடியும் வரை கோவில்-மசூதி தொடர்பான எந்த வழக்கும் தொடர முடியாது" எனத் தெரிவித்துள்ளனர். மதிப்பாய்வின் கீழ் முக்கிய விதிகளின் 2, 3 மற்றும் 4 பிரிவுகள் ஆகியவை அடங்கும். இவை வழிபாட்டு தலங்களை மாற்றப்படுவதை தடுப்பதற்கான பிரிவு ஆகும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் இது தொடர்பான மேலும் வழக்கு ஏதும் தொடர முடியாது. ராமஜென்மபூமி வழக்கும் எங்களிடம் உள்ளது. தற்போது வரை தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமான உத்தரவு அல்லது இறுதி உத்தரவு நீதிமன்றங்களால் பிறப்பிக்கக்கூடாது. ஒரு வழக்கு நம் முன் நிலுவையில் இருக்கும்போது, வேறு எந்த நீதிமன்றமும் அதை விசாரிப்பது நியாயமா? நாங்கள் செயல்பாட்டின் வரம்பில் உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News