''கெஞ்சினேன்.. உதவிக்காக மீண்டும் மீண்டும் கத்தினேன்'' - ஸ்வாதி மாலிவால்!

Update: 2024-05-17 14:07 GMT

ஸ்வாதி மாலிவால்

ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் இடைக்கால ஜாமீனில் வெளிவந்ததையடுத்து, திங்களன்று அவரைச் சந்திக்கச் சென்றார்.

அப்போது கெஜ்ரிவாலின் தனி உதவியார் பிபவ் குமார், அவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் பிபவ் குமார் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், டில்லி போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சென்று கெஜ்ரிவால் வீட்டில் ஆய்வு செய்தனர்.

அதன்படி சம்பவம் நடந்தது பற்றி எஃப்.ஐ.ஆரில் ஸ்வாதி மாலிவால், `மாதவிலக்கு, வலி அதிகமாக இருக்கிறது விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். உதவிக்காக மீண்டும் மீண்டும் கத்தினேன். ஒரு கட்டத்தில், என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவரை என் கால்களால் தள்ளிவிட்டேன்.'' என கூறியுள்ளார்.

இதனையடுத்து தாக்குதல் நடந்த அறையில், இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்ற முடிவு செய்த போலீசாரின் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். மேலும், கெஜ்ரிவாலின் பாதுகாப்பு ஊழியர்கள், தாக்குதல் சம்பவத்தை பார்த்தவர்கள், மொபைலில் பதிவு செய்தவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News