ஆளுநர் பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை !

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-03-18 06:44 GMT
ஆளுநர் பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை !
தமிழிசை சவுந்தர்ராஜன்
  • whatsapp icon

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.

அதன் அடிப்படையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வாரணாசியில் களமிறங்க உள்ளார்.

இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் இன்னும் 2-3 நாட்களில் தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழசை சௌந்தரராஜன் பாஜக வேட்பாளராக மீண்டும் களம் இறக்கப்படுகிறாரா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.ஆளுநர் பதவியை ராஜினமா செய்தார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி, தென் சென்னை, நெல்லை அல்லது புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News