வரி ஏய்ப்பு : Infosys நிறுவனம் அறிக்கை!
Update: 2024-08-01 05:30 GMT
சுமார் ரூ.32,000 கோடிக்கு மேல் Infosys நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக GST புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் விடுத்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Infosys, 2017-2022 காலக்கட்டத்தில் ரூ.32,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளதாக GST புலனாய்வு இயக்குநரகம் தகவல் தெரிவித்த நிலையில், இன்போசிஸ் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையில், ''GST புலனாய்வு இயக்குநரகத்தின் நோட்டீஸுக்கு பதிலளிக்கும் பணியில் உள்ளோம்.
GST வரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகின்றோம்.
அனைத்து GST நிலுவைத் தொகையையும் செலுத்தியுள்ளோம்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.