உலகையே நடுங்க வைத்த நிகழ்வு - [26-12-2004]

Update: 2024-12-26 04:50 GMT

சுனாமி 

சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. மக்கள் மனதில் வடு இன்னும் மறையவில்லை. சுனாமியின் பாதிப்பை நினைக்கும் போதெல்லாம் ஒருவித பதற்றத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றன நினைவுகள்.

மேலும், பல இடங்களில் உள்ள நினைவிடங்களில், மலர் வளையம் வைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். மீனவர்கள் இன்று ஒருநாள் கடலுக்குள் செல்லாமல் நினைவஞ்சலி செய்து வருகின்றனர்.

00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது.

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் டிசம்பர் 2004ல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையான நிலநடுக்கம் ஆகும்.இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது .


Tags:    

Similar News