மக்கள் தொகை விகிதம் 2036-ல் கணிசமாக அதிகரிக்கும் என அமலாக்க அமைச்சகம் தகவல் !!

Update: 2024-08-13 12:10 GMT

மக்கள் தொகை

இந்தியாவில் `பெண்கள் மற்றும் ஆண்கள் 2023' என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வரும் 2036ல் ஆண், பெண் விகிதம் மேம்படும்; 1000 பேருக்கு 952 பேர் ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என பாலின விகிதம் இருந்தது. 2036ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 152.2 கோடியாக உயர வாய்ப்புள்ளது. 2011ல் பெண்கள் சதவீதம் 48.5 சதவீதமாக இருந்தது. 2036ல் 48.8 சதவீதமாக அதிகரிக்கும். பிரசவத்தின் போது தாய் இறப்பதும், பெண் சிசுக்கள் கொல்லப்படுவதும் குறைந்துள்ளது.

15 வயதிற்குட்பட்ட தனி நபர்களின் வீதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருவூறுதல் குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால கட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016 முதல் 2020-ம் ஆண்டு வரை கருவூறுதல் சதவீதம் 20-24 வயதில் 135.40-ல் இருந்து 113.6 ஆக குறைந்துள்ளது. 25-29 வயதில் 166-ல் இருந்து 139.6 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் 35-39 வயதில் கருவூறுதல் விகிதம் 32.7 சதவீதத்தில் இருந்து 35.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News