திருவிழாக்கள், திருமணக் காலத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி உயர்வு : ஒன்றிய வர்த்தக அமைச்சகம்

திருவிழாக்கள், திருமணக் காலத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி உயர்ந்துள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-19 11:05 GMT

தங்கம் 

திருவிழாக்கள், திருமணக் காலத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி உயர்ந்துள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியா ரூ.1,26,403 கோடி மதிப்புக்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 2023 நவம்பரில் ரூ.29,262 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் 2024 நவம்பரில் தங்கம் இறக்குமதி. திருவிழாக்கள், திருமணக் காலத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி நவம்பரில் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து நவம்பர் வரை ரூ.4,16,806 கோடி மதிப்புக்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. 2023 ஏப்ரல் நவம்பர் காலத்தில் ரூ.2,80,111 கோடியாக இருந்த தங்கம் இறக்குமதி, 2024 ஏப்ரல், நவம்பரில் 49% அதிகரித்துள்ளது. இந்தியாவின் தங்கம் இறக்குமதி இவ்வாண்டு அதிகரித்ததால் வெளி வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏற்றுமதி மதிப்பை விட இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு அதிகம் உள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு அதிகம் உள்ளதால் வெளிவர்த்தக பற்றாக்குறை உயர்வு. 2023 ஏப்ரல்-ஜூனில் ரூ.75,705.64 கோடியாக இருந்த இந்தியாவின் வெளிவர்த்தக பற்றாக்குறை 2024 ஏப்ரல்-ஜூனில் ரூ.82,511. நாட்டின் மொத்த இறக்குமதியில் தங்கத்தின் பங்கு 5% ஆக உள்ளதாகவும் ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்தது. 2023-24ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிவர்த்தகப் பற்றாக்குறை 30% உயர்ந்து ரூ.3,87,375 கோடியாக அதிகரிப்பு. தங்கம் இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இந்தியா இருக்கிறது. சராசரியாக இந்தியா ஆண்டுக்கு 800லிருந்து 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்வதாக வர்த்தக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா தன் மொத்த தங்கம் இறக்குமதியில் 40%ஐ சுவிட்சர்லாந்திடம் இருந்தும், 16%ஐ யுஏஇ நாட்டிடம் இருந்தும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா தனது தங்கத் தேவையில் 10 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

Tags:    

Similar News