'2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது' - உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற அம்மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2024-03-01 09:06 GMT

உச்ச நீதிமன்றம் 

ராஜஸ்தானில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற அம்மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ என்ற திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசுப்பணி பெறுவதற்கான தகுதியற்றவர்கள் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து அந்த சட்டத்தை எதிர்த்து ராம்ஜி லால் என்பவர் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் 2002ம் ஆண்டில் அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியது. அதாவது இந்த சட்டம் பாரபட்சமானதாகவோ அல்லது அரசியலமைப்பை மீறுவதாகவோ இல்லை என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Tags:    

Similar News