அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்.. ஆம் ஆத்மி ஆவேசம் !

Update: 2024-05-20 10:53 GMT

ஆம் ஆத்மி 

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இடைக்கால ஜாமினில் வெளியில் வந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சங் சிங், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வந்ததில் இருந்தே பாஜக பீதியில் உள்ளதாக விமர்சித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கொடிய தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த சதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக செயல்படுத்தப்படுவுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். ராஜீவ் சவுக் மற்றும் படேல் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல்கள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிரை பறிக்க பாஜக சதி செய்து வருவதாக சாடினார். முன்னதாக, 23 நாட்கள் சிறையில் இருந்த போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்காதவர்கள் இப்போது இதெல்லாம் செய்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Tags:    

Similar News