ஒரே நாடு ஒரே தேர்தல்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-12 09:42 GMT

union cabinet meeting 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்து அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. பாராளுமன்றத்தில் அவைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், காங்கிரஸ்-ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக நேற்று ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை கூட்டம் நாள்முழுவதும் ஒத்துவைக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியது. தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளன. இதுதொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்ததில் தாக்கலான பின்னர், விரிவான ஆலோசனைக்காக நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்படும். மக்களவை, மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029 முதல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News