தியாகம் என்பது மரணமே இல்லாதது என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது - பிரதமர் மோடி
கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். கார்கில் வெற்றியின் 25- வது ஆண்டு நிறைவை ஒட்டி, டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். டிரசில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் இது தொடர்பாக அவர், ''உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நம் தேசம் மிகவும் கடன் பட்டுள்ளது
நம் தேச அன்னைக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நான் தலை வணங்குகிறேன்
தேசமே முதன்மை என்ற உணர்வுக்கு வணக்கம் செலுத்துகிறேன்
தீவிரவாதத்தை நம்முடைய வீரர்கள் முழு வலிமையோடு எதிர்ப்பார்கள்
லடாக், காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான பிரச்சினைகளை இந்தியா தோற்கடிக்கும்
370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது
ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை மேம்பட்டு வருகிறது
ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் லடாக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும்
கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கின் பட்ஜெட்டை 6,000 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளோம்
லடாக் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மத்திய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது
லடாக் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைக்க சிந்து பல்கலை. அமைக்கப்பட்டு வருகிறது.'' என்று தெரிவித்தார்.