வயநாடு நிலச்சரிவு: மக்களை சந்திக்கும் பிரதமர் மோடி !
Update: 2024-08-09 09:32 GMT
பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10-வது நாளாகநேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார்.