புகார்கள் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்போம்: ராகுல் காந்தி

அரியானாவின் ஏராளமான சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்த புகார்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-09 15:33 GMT

ராகுல் காந்தி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

90 இடங்களை கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் காங்கிரஸ் 50-க்கும் அதிகமான இடங்களில் முன்னணி பெற்றது. பின்னர் அப்படியே தலைகீழாக மாறியது. பா.ஜ.க. முன்னிலை பெற்று இறுதியாக 48 இடங்களை பிடித்து தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மெதுவாக அப்டேட் செய்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் தோல்வியை ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்தது. இந்த நிலையில் அரியானா மாநில தோல்வி குறித்து ராகுல் காந்தி பேசுகையில், அரியானாவின் எதிர்பாராத முடிவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஏராளமான சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்த புகார்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிப்போம். "ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது, ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்க என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில வெற்றி இந்தியாவின் வெற்றி. அரசியலமைப்பின் வெற்றி. தேர்தலுக்க பிந்தைய கருத்துக் கணிப்பில் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் கருத்து கணிப்பு பொய்யாக்கப்பட்டது என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News