சிஏஏ சட்டத்தை எதிர்க்க காரணம் என்ன தெரியுமா..?

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது தேர்தல் ஆதாயமே என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Update: 2024-03-12 06:51 GMT

சிஏஏ சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள்

நீண்ட நாட்களாக விவாதத்தில் இருந்த சிஏஏ சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், குறிப்பாக இந்தியா கூட்டணியிலுள்ள எதிர்கட்சியினரும், இஸ்லாமிய சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடே எதிர்க்கும் சிஏஏ சட்டம் என்றால் என்ன..? அதனால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ன என்ற கேள்வி விவாதமாகியுள்ளது. இந்த நிலையில் சிஏஏ சட்டம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், மாநிலங்களவை எம்பிக்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சிஏஏ சட்டம் ( குடியுரிமை திருத்தச் சட்டம்):

சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. சட்டத்தின்படி 1955ம் ஆண்டு இயற்றபப்ட்ட குடியுரிமை சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு மேலா இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், 6 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தாலே குடியுரிமை பெறும் சட்டத்தை பாஜகாரசு கொண்டு வந்தது. அதாவது 2014ம் ஆண்டுக்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மத அடிப்படையிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையின மக்கள் குடியுரிமை பெற மசோதாவில் இடமுள்ள்ளது.

அதில் குறிப்பாக இந்து, சிக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்துவ சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய ஆவணங்களில்லை என்றாலும், அவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்களில் அண்டை நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் குடியுரிமை பெற முடியாது, அதேபோல் நீண்ட நாட்களாக தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ்சர்களுக்கும் குடியுரிமை வழங்க சட்டத்தில் இடமில்லை.

இப்படி இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்கள். அசாம், திரிபுரா, மேற்கு வங்கம், இலங்கை தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றானர்.

குடியுரிமை பெற யார், யார் விண்ணப்பிக்கலாம்:

இந்திய வம்சாவளியை சேர்ந்த அல்லது குடியுமை பெற்றவரை திருமணம் செய்தவர்கள் சிஏஏ சட்டம்படி குடியுரிமை பெறலாம். இந்திய குடிமகனாக இருப்பவரின் 18 வயது நிரம்பாத பிள்ளைகளும், இந்திய குடிமக்களை பெற்றோர்களாக கொண்டவர்களும் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான OCI கார்டு உள்ளவர்களும் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.

குடியுரிமை பெற விண்ணப்பிப்பவருக்கு இந்திய குடியுரிமை கொண்ட ஒருவர் பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும், அதேபோல் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட மொழிகளில் ஒன்றை எழுதவோ, படிக்கவோ அல்லது பேசவோ தெரிந்திருக்க வேண்டும்.

சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்:

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமிய அகதிகளுக்கு சிஏஏ சட்டத்தில் இடமில்லை. சிறுபான்மையினர் சிஏஏ சட்டத்தில் குடியுரிமை பெறலாம் என்றால், பகிஸ்தான் மற்றும் அப்கானிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு, மியான்மரை சேர்ந்த ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கும் ஏன் இடமில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் தென்மாநிலங்களில் இலங்கை வாழ் தமிழர்கள் அதிகமாக வசிக்கும்போது அவர்களுக்கும் ஏன் இடமில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா மதசார்ப்பற்ற நாடு என்ற பட்சத்தில் குடியுரிமை சட்டம் கொண்டுவந்து சில மதத்தினரை மட்டும் ஒதுக்குவது எந்த விதத்தில் சரியானது என்ற கேள்வியும் எழுந்துள்ளாது. இதனால், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் சிஏஏ சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது தேர்தல் ஆதாயமே என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

Tags:    

Similar News