ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம்; வழக்கு விசாரணைகளின் நேரலை முடக்கம்!!

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

Update: 2024-09-20 10:09 GMT

supreme court

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நாடாகும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்ட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags:    

Similar News