சிவகார்த்திகேயன் வேற லெவல், மாவீரன் திரைவிமர்சனம்

Update: 2023-07-14 10:26 GMT

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், சரிதா உள்ளிட்டோர் நடித்த மாவீரன் படம் இன்று தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறது.

பொதுவாக சூப்பர் ஹீரோ படங்களில் ஹீரோவுக்கு ஏதோ ஒரு சக்தி கிடைக்கும். அதுபோலவே தான் இந்த படத்திலும் ஆனா இங்க ஒரு twist சிவாவிற்கு கேட்கும் குரல் தான் அந்த சூப்பர் ஹீரோ. படத்தில் அந்த குரல் எதற்காக ஒலிக்கிறது அந்த குரல் சிவாவை என்ன என்ன செய்ய வெய்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை. சிவகார்த்திகேயன், யோகி பாபு இருவரின் காம்போ மிகவும் அறுமையாக இருந்தது. குறிப்பாக யோகி பாபு வரும் இடங்களில் எல்லாம் திரையில் சிரிப்பொலி.

Advertisement

அரசியல்வாதியாக இந்த படத்தில் களம் இறங்கி உள்ளார் மிஷ்கின். 2nd half-ல் நான் மிஷ்கினை திரையில் காண்பிக்கின்றனர். எதிர்பார்த்த அளவிற்கான காட்சிகள் மிஸ்கினுக்கு இல்லை. அரசியல் காமெடி காதல் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளது இந்த திரைக்கதை. முதல் பாதி விறுவிறு என்று போனாலும் இரண்டாம் பாதி வலவல என்று இருந்தது. மற்றபடி சிறுவர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நல்ல ஒரு சூப்பர் ஹீரோ கதையை முன்னிறுத்தி உள்ளார் முன்னிறுத்தி உள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்

Tags:    

Similar News