ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS பணிக்காலியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு தேதியை அறிவித்துள்ளது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30 ஆம் தேதி எனவும். இத்தேர்வுக்கு https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு இந்த தேர்வு வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி TET PAPER-II-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வயது தகுதி பொது பிரிவினருக்கு அதிக பட்சமாக 53 வயது. மற்ற பிரிவினருக்கு வயது 58 ஆகும். தேர்வு கட்டணம் SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.600 ஆகும். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள்
இந்த இணைப்பினை https://forms.gle/vXF8VpohQTKp8c4v9 பயன்படுத்தி நேரடி அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளலாம். studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் கொண்டுள்ளார்.