திருப்பத்தூரில்தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானிய உணவகத்தினை ஆட்சியர் தர்ப்பகராஜ் திறந்து வைத்தார்.

திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானிய உணவகத்தினை ஆட்சியர் தர்ப்பகராஜ் திறந்து வைத்தார்.

Update: 2024-07-22 08:31 GMT
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானிய உணவகத்தினை ஆட்சியர் தர்ப்பகராஜ் திறந்து வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திறந்து வைத்தார் சிறுதானிய உணவுகள் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் திணை சாமை வரகு குதிரைவாலி கம்பு கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களை பயன்படுத்தி சிறுதானிய சிற்றுண்டிகள் முருங்கைக்கீரை முடக்கத்தான் கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை சூப் வகைகளும் பல்வேறு தானிய சுண்டல் வகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் இந்த சிறு தானிய உணவகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஜோலார்பேட்டை , ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News