மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் பாராட்டு

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் பாராட்டியுள்ளார்.

Update: 2024-07-24 14:36 GMT
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் கூறியதாவது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். மோடி அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்வி நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கும், புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ளார்கள். எஸ்.எம்.எஸ்.எம்.ஈ. தொழில் நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் வரை கடன் உத்திரவாதம் கொடுத்திருப்பதும், புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல மானிய திட்டங்கள் கொடுத்திருப்பதும் இயற்கை விவசாயத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதும் பாராட்டுக்குரியது. ஊக்கத்தொகையுடன் இணைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பில் மூன்று திட்டங்களை மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். அதில் 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி செலவில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி வழங்கப்படும் எனவும், அவர்கள் பயிற்சி பெறும் போது இலவசமாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். இதன்படி வேலை செய்வோர்களுக்கு மட்டுமில்லாமல் தொழில் முனைவோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகமாகி, பொருளாதாரம் மேம்பாடு அடையும். வேலையில்லா திண்டாட்டமும் குறைக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்காக தொழில் துறையுடன் இணைந்து பெண்களுக்கான தங்கும் விடுதிகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்தைகைய திட்டங்கள் மூலம் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரித்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். இது போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் இந்த ஆண்டுதான் முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் தொழில் மட்டுமின்றி நிதி நிலைமையிலும் வளர்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்பும் பெருகி நல்ல பொருளாதார ஸ்திரதன்மை நோக்கி நம் நாடு நடைபோடும். இத்தகைய சிறப்பு மிக்க பட்ஜெட் நமக்கு தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News