தமிழ்நாடு துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அரியாகவுண்டம்பட்டியில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா..

Update: 2024-11-28 08:42 GMT

 உதயநிதி ஸ்டாலின்  பிறந்த நாள்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாசிகளுடன், சாதனைச் செல்வர் நமது K R.N. ராஜேஷ்குமார் M.P.அவர்களின் வழிகாட்டுதலில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், பவளவிழா கண்ட பேரியக்கத்தின் இளம் தலைவர், இளைஞர்களின் இதயத்துடிப்பு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரியாக்கவுண்டம்பட்டியில் மாணவ மாணவிகளுக்கு நோட் புத்தகம், பேனா பென்சில் வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி துணை தலைவருமான அண்ணன் கு அன்பழகன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளரும் மாவட்ட பிரதிநிதி அண்ணன் எம் சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரா மணிகண்டன், வார்டு கவுன்சிலர் வாசுதேவன், கோடிஸ்வரன், வடிவேல், சேகர், பாபு, மணி, குமார், செந்தில், ராமலிங்கம் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தாமரைக் கண்ணன், ஆறுமுகம் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News