சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2026-01-29 13:36 GMT
பரமத்திவேலூர்,ஜன.,29: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பேரில் பரமத்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஜனவரி 1 முதல் 31 ந்தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பரமத்திவேலூர் அரசு கால்நடை மருத்துவ மனை அருகில் தொடங்கி வேலூர் பேருந்து நிலையத்தில் முடிவற்றது. பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷாஜகான் முன்னிலையில் வேலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பேருந்தில் கவனக்குறைவால் வளைவு பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், பஸ் படிக் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது, அதிக பாரம் ஏற்றி செல்வது அதில் ஏற்படும் விபத்துக்கள் மோட்டார் சைக்கிளில் அதிக நபர்கள் செல்வதால் ஏற்படும் விபத்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்திச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. இந்நிகழ்வில் பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஒட்டுநர் பயிற்சிப் பள்ளியினர், வட்டார போக்குவரத்து பணியாளர்கள் பொதுமக்கள் என பல் வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

Similar News