ஜன. 31ல் நடக்கும் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்

குமாரபாளையத்தில் ஜன. 31ல் ஜல்லிக் கட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது;

Update: 2026-01-29 15:27 GMT
குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில் ,தனியார் கல்லூரியின் பின்புறம் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஒன்பதாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஜன. 31ல் நடைபெற உள்ளது. 500-க்கும் மேற்பட்ட மாடுகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் இந்த போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், தற்காலிக முதலுதவி சிகிச்சை செய்யும் வகையில் மருத்துவ முகாம், மாடுகள் தங்க வைக்கும் இடம், வரிசையில் நிற்க வைத்து அனுப்ப தேவையான தடுப்புகள், மாடுகள் வெளியேற, பாதுக்காப்பான வழிகள், பார்வையாளர்கள் கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடம், தண்ணீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி, மாடுகளை கொண்டு வந்த டெம்போக்கள் நிறுத்தும் இடம், உள்ளிட்டவை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் சொன்ன அறிவுரைப்படி பணிகள் நடந்து வருகிறது என ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் கூறினார்கள்.

Similar News