பரமத்தி வேலூர், ஜன.29: பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (31-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி. சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.