தேசிய சிலம்பம் போட்டி- இராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா பள்ளி மாணவி ரோஷினி தங்கபதக்கம்

இராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா NPS சீனியர் செகன்டரி பள்ளி மாணவி ரோஷினி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அவரை வேதவல்லி வித்யாலையா பள்ளி குழுமங்களின் தாளாளர் வித்யா சம்பத் பாராட்டினர்.;

Update: 2026-01-29 11:38 GMT
தேசிய சிலம்பம் போட்டி- இராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா பள்ளி மாணவி ரோஷினி தங்கபதக்கம் கோவாவில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டியில் இராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா NPS சீனியர் செகன்டரி பள்ளி மாணவி ரோஷினி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அவரை வேதவல்லி வித்யாலையா பள்ளி குழுமங்களின் தாளாளர் வித்யா சம்பத் பாராட்டினர். மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் 29வது அகில இந்திய சேம்பியன் ஷிப் விளையாட்டு போட்டிகள் கடந்த 25ந் தேதி கோவாவில் அமைந்துள்ள பன்டிட் ஜவஹர்லால் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டியில் வேல் கம்பு பிரிவு ராணிப்பேட்டை வானாபாடி சாலையில் இயங்கி வரும் வேதவல்லி வித்யாலயா NPS சீனியர் செகன்டரி பள்ளி 9ம் வகுப்பு மாணவி எஸ்.ஜி.ரோஷினி பங்கேற்றார். சிலம்பம் போட்டியில் வேல் கம்பு பிரிவு மாணவி ரோஷினி முதலிடம் பெற்று தங்க பதக்கத்துடன் சேம்பியன் ஷிப் பட்டம் பெற்றார். தேசிய சேம்பியன் மாணவி ரோஷினி தனது 9ம் வயதிலிருந்து பள்ளி மூலம் சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு சிலம்பம் நிபுணர் முரளி பயிற்சி அளித்து வருகிறார்.வேதவல்லி வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி மாணவ மாணவிகள் தடகளம் மட்டுமின்றி வில்வித்தை, குத்து சண்டை உள்ளிட்ட போட்டிகளிலும் பரிசுகளை குவித்துள்ளனர்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவி ரோஷினி பங்கேற்று அதில் தங்கபதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கபதக்கம் வென்ற மாணவி ரோஷினியை வேதவல்லி வித்யாலையா பள்ளி குழுமங்களின் தாளாளர் வித்யா சம்பத் பாராட்டி கெளரவ படுத்தினர்.

Similar News