வாலாஜாபேட்டை அண்ணா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் ​வாலாஜாபேட்டை அண்ணா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2026-01-29 11:04 GMT
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்: 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்! இராணிப்பேட்டை மாவட்டம் ​வாலாஜாபேட்டை அண்ணா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்கியது; தொடர்ந்து காலை 9:45 மணிக்கு விமானத்திற்கும், 10 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆலய தர்மகத்தா கிருஷ்ணன் பிள்ளை மற்றும் விழா குழுவினரின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், இரவு 7 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வும் 8 மணிக்கு மங்கல இசை கச்சேரியும் நடைபெறவுள்ளது

Similar News