சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி-ஏற்றுமதி வரியை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்!

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்திட ஏற்றுமதியை அதிகரித்து கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தவும் ஏற்றுமதிக்கான வரியை முற்றிலும் பூஜ்ஜியம் சதவீதத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.;

Update: 2026-01-29 16:08 GMT
அதிக விளைச்சல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.பாலசுப்ரமணியன் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது...தற்பொழுது தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் தற்பொழுது சின்ன வெங்காயம் வயல்வெளிகளில் 1 கிலோ பத்து ரூபாயும் வெளிமார்க்கெட்டில் ரூ.15 முதல் ரூ.20 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்திட ஏற்றுமதியை அதிகரித்து கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தவும் ஏற்றுமதிக்கான வரியை முற்றிலும் பூஜ்ஜியம் சதவீதத்திற்கு கொண்டு வரவும் மேலும் ஏற்றுமதி வாய்ப்புள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வழிவகை செய்யுமாறும் குறைந்தபட்சம் உள்நாட்டு சந்தை விலையை விட கூடுதல் விலை கிடைப்பதற்கு விவசாயிகள் வியாபாரிகளை அழைத்து பேசி விரைந்து தீர்வு காண வேண்டுமென்றும் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கும் மத்திய நுகர்வோர் மற்றும் உணவுத்துறை அமைச்சருக்கும் மற்றும் தமிழக வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சருக்கும் விவசாய முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் விவசாய சங்கங்களின் ஆலோசகர் மூத்த சின்ன வெங்காயம் விவசாயி பரமசிவம் சார்பாகவும் இந்த வேண்டுகோளை மத்திய மாநில அரசுக்கு வைக்கிறோம். எனவே இதை கவனித்து விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Similar News