கோவில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவார்த்தை

கோவில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவார்த்தை

Update: 2024-07-25 11:47 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் முஞ்சனூர் கிராமம் பொன்காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தற்போதைய அறங்காவலர்களாக உள்ள பழனிச்சாமி விவேகானந்தன் அலமேலு ஆகியோர் தரப்பு சேகர், M.C.மோகன், கணேசன், பரமேஸ்வரன், சேதுராமன், ஆகியோர் கொண்ட மற்றொரு தரப்பு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாட்டை ஒட்டி கடந்த 17.6.24 ல் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவர்கள் தலைமையில் திருவிழா நடத்தப்படும் என முடிவாகி இரு தரப்பும் சம்மதித்து இருந்த நிலையில் பழனிச்சாமி விவேகானந்தன் அலமேலு தரப்பினர் அறங்காவலர் குழு மற்றும் கோவில் செயல் அலுவலரை வைத்து திருவிழா நடத்தலாம் என உயர் நீதிமன்ற உத்தரவை பெற்று வந்தனர்.அதன் அடிப்படையில் இன்று இரு தரப்புக்கும் இடையே வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன், எலச்சிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் முஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு தரப்பில் சீனி என்கிற சீனிவாசன், ஓவி என்கிற வெங்கடாசலம், வினோத்,பழனிச்சாமி, நடராஜன், ஆகியோரும் மற்றொரு தரப்பில் சேகர், எம்.சி மோகன், கணேசன், பரமேஸ்வரன், சேதுராமன்,ஆகியோரும்கலந்து கொண்டனர். உயர்நீதிமன்ற உத்தரவு ஆதாரங்களை காட்டிய நிலையில் அதன் அடிப்படையில் அ-தரப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்ஆகியோர் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதி வழங்கப் பட்டதாகவும் 25.07.24ஆம் தேதியிலிருந்து 09.08.24 க்குள்நடத்திக் கொள்ளலாம் எனவும் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து இரு தரப்பினரும் அமைதியாக கலைந்து சென்றனர்

Similar News