மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பள்ளிபாளையம் பிரிவு சாலையில் தேமுதிக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-25 12:14 GMT
தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழக சார்பில் மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்கள் சரி வர வழங்காதது, காவிரி நீர் தர மறுக்கும் கன்னட அரசை கண்டித்து, தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, நாமக்கல் வடக்கு மாவட்ட கழக சார்பில் குமாரபாளையம் பஸ் நிலையம் அருகில் மாவட்ட கழக செயலாளர் விஜய்சரவணன் தலைமையில், குமாரபாளையம் நகர செயலாளர் நாராயணசாமி வரவேற்று பேசினார், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் சக்திவேல், தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குமார் கண்டன பேருரை ஆற்றினார், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் கணேசன், இக்கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் மந்திரி, செல்வம், நகர செயலாளர் இராசிபுரம் இளையராஜா, திருச்செங்கோடு குணசேகரன், பள்ளிபாளையம் வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர்கள் பள்ளிபாளையம் தெற்கு சக்திவேல், வடக்கு மணியண்ணாண், திருச்செங்கோடு வடக்கு நாகராஜ், தெற்கு தர்மராஜன், எலச்சிபாளையம் சக்திவேல், நாமகிரிப்பேட்டை தமிழ்செல்வன், பேரூர் கழக செயலாளர் ஆலம்பாளையம் முரளி, மாவட்ட சார்பு அணி கேப்டன் மன்றம் கோபி, பழனிவேல், உதயகுமார், கோபிநாத், இளைஞர் அணி தங்கம், சரவணன், மணிகண்டன், மகளிர் அணி தமயந்தி, மாணவரணி பூபதி, சரவணன், ஞானப்பிரதீப், வர்த்தகர் அணி சுரேஷ், சக்திவேல், வடிவேல், செல்வராஜ், விவசாய அணி சிவகுமார், கோபாலகிருஷ்ணன், நெசவாளரணி ரமேஷ், குமார், முனியப்பன், கணேசன், தங்கவேல், தொண்டரணி செல்வராஜ், பாஸ்கர், விமல்ராஜ், தொழிற்சங்கம் தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சம்பத், மற்றும் குமாரபாளையம் நகரம் செல்வம், ராசு, தனபால், கே.முருகேஷ்,எம்.முருகேசன், பள்ளிபாளையம் ஒன்றியம் வேலுமணி, மற்றும் கழகத்தில் பல்வேறு பதவிகள் வைக்கும் நிர்வாகிகள், பொதுமக்கள் மகளிர் அணி என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பினர்.

Similar News