காவிரியில் வருகின்ற உபரி நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க மேட்டூர் அணையை விரைவாக திறக்க வேண்டும் எம்எல்ஏ ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை
காவிரியில் வருகின்ற உபரி நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க மேட்டூர் அணையை விரைவாக திறக்க வேண்டும் எம்எல்ஏ ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடிகளை தாண்டி இருக்கிறது. 50,000 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகிய அணைகளிலிருந்து காவிரி நதியில் 1,30,000 கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் வெகு விரைவில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். நிரம்பும் வரை காத்திருக்காமல் உபரி நீரை கடலிலே அதிகமாக கலக்க விடாமல் பயன்படுத்துவதற்கு திட்டமிட வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து காவிரி நதியிலும், கிளை வாய்க்கால்களிலும் உடனடியாக தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகின்ற மேட்டூர் அணை இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை. இன்னும் தாமதப்படுத்தாமல் விரைவாக திறப்பதற்கு அரசு முன்வர வேண்டும். தண்ணீர் வரத்தை உடனுக்குடன் கவனித்து உபரி நீரை வீணாக்காமல் தடுப்பதற்காக திட்டமிட்டு மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும். எம் எல் ஏ ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்