அதியமான் மகளிர் கல்லூரியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரயு பங்கேற்பு
அதியமான் மகளிர் கல்லூரியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரயு பங்கேற்பு
ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரயு பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரயு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முன்னதாக அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் சீனித் திருமால் முருகன் சிறப்புரையாற்றினார் அரசு பள்ளி மாணவர்கள் செய்முறை வடிவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரயு பார்வையிட்டார். பின்னர் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று இந்த ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற பூவிதா என்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் சரயு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக வழங்கி அவர்களின் பெற்றோரை கௌரவித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் சீனி. திருமால் முருகன் மற்றும் சோபா திருமால்முருகன் ஆகியோர் அதற்கான ஏற்பாட்டினை செய்து நடத்தினார்கள்.