ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் ஆரம்பப்பள்ளியில் மரம் நடுவிழா .

முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அய்யனன் முன்னிலையில், தலைமை ஆசிரியை சுகுணா, ஆசிரியை மேனகா, மேலாண்மை குழு தலைவர் நந்தினி உள்ளிட்டோர், பள்ளி மாணவ,மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்

Update: 2024-11-22 15:41 GMT
எஸ்.எஸ்.புரம் ஆரம்பப்பள்ளியில் மரம் நடுவிழா . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மரம் நடுவிழா நடைபெற்றது .தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் ,பள்ளிகள், கல்லூரிகளில் மரங்கள் நட்டு வளர்த்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், எஸ்.எஸ்.புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அய்யனன் முன்னிலையில், தலைமை ஆசிரியை சுகுணா, ஆசிரியை மேனகா, மேலாண்மை குழு தலைவர் நந்தினி உள்ளிட்டோர், பள்ளி மாணவ,மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர் .மேலும் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்தும் ,அதை பேணி காப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து, சுகாதாரமான காற்றும் ,நல்ல மழைப்பொழிவு ஏற்பட வழிவகை செய்வதே,இந்த மர நடுதலின் நோக்கம் என்று எடுத்துக் கூறினர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News