நாமக்கல்: வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்!

நாமக்கல்லில் வருமான வரித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் வருமான வரித்துறையின் புதிய விவாத் சே விஸ்வாஸ் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருமான வரித்துறை ஈரோடு பிரிவு இணை ஆணையர் ஸ்ரீநிவாஸ்கண்ணா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.

Update: 2024-11-22 15:09 GMT
நாமக்கல்லில் வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டம் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ஹோட்டலில் நடைபெற்றது. நாமக்கல்லில் வருமான வரித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் வருமான வரித்துறையின் புதிய விவாத் சே விஸ்வாஸ் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருமான வரித்துறை ஈரோடு பிரிவு இணை ஆணையர் ஸ்ரீநிவாஸ்கண்ணா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.அப்போது, சமீபத்தில் வருமான வரித்துறையால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகள் தொடர்பான சர்ச்சைகளை விரைந்து தீர்க்க, நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் குறித்து விளக்கி கூறினார்.மேலும், வருமான வரி செலுத்துவோர் கணக்குகளை முறையாக பராமரிப்பதன் அவசியம், வரியை குறித்த காலத்தில் செலுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த திட்டம் குறித்த சந்தேகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.முன்னதாக நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்ஸ் அசோசியேசன் தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஈரோடு மண்டல துணை ஆணையா் மணிகண்டன், நாமக்கல் மாவட்ட வருமான வரி அலுவலா்கள் அப்துல் ரஷீத், கமலக்கண்ணன், பிரபு, மாவட்ட பட்டயக் கணக்காளா்கள் சங்கத் தலைவா் ஜெ. வெங்கடசுப்பிரமணியன், செயலாளா் எம். செல்வராஜூ, மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ, தொழிலதிபர் ஸ்ரீ தேவி மோகன், ஆடிட்டர்கள், திரளான தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News