ரசாயனம் கலந்த தண்ணீரை குடித்த வெள்ளி பட்டறை தொழிலாளி சாவு
போலீசார் விசாரணை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி மல்லாக்காள் நகரை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 40). வெள்ளி பட்டறை தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடாஜலபதி மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்தும் ரசாயன தண்ணீரை குடித்துவிட்டு அவதியடைந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாஜலபதி இறந்துவிட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.