கரடிகள் குட்டியுடன் ரோட்டை கடந்து செல்வதால் வேகத் தடுப்பு அமைப்பு
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கணவாய் மலைப்பகுதி வழியாக செல்கிறது. இரவு மற்றும் அதிகாலையில் கரடிகள் குட்டியுடன் ரோட்டை கடந்து செல்கிறது.
ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதுகொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கணவாய் மலைப்பகுதி வழியாக செல்கிறது. இரவு மற்றும் அதிகாலையில் கரடிகள் குட்டியுடன் ரோட்டை கடந்து செல்கிறது.எந்நேரமும் அப்பகுதி ரோட்டில் வாகனங்கள் வந்து செல்வதால் ரோட்டை கடந்து செல்லும் கரடிகளுக்கு பாதுகாப்பு தரும் விதமாக கரடிகள் கடந்து செல்லும் வழித்தடம் அருகே ரோட்டில் வனத்துறை சார்பில் வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா உத்தரவில், தேனி மாவட்ட கவுரவ வன உயிரின காப்பாளர் டாக்டர் ராஜ்குமார் ஏற்பாட்டில் வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார் தெரிவித்தார்.