ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஏழாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி மிட்டப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்றது.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஏழாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி மிட்டப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்றது.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஏழாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி மிட்டப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிட்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய குழு உறுப்பினர் உஷாராணி குமரேசன் தலைமையில் மிட்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், மூன்றாம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், கொண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி, பாவக்கல் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், மாரம்பட்டி ஊரட்சிமன்ற தலைவர் பூமலர், ஆகியோர் முன்னிலையில், மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மிட்டப்பள்ளி, மூன்றம்பட்டி கொண்டம்பட்டி, மாரம்பட்டி, மற்றும் பாவக்கல், உள்ளிட்ட ஊராட்சிளை சார்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மின்சார வாரியம் சார்பாக, புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் மாற்றங்கள் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் வாரிசு சான்றிதழ் நில அளவீடு உள்ளிட்டவையும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக, கட்டுமான வரைபடம் ஒப்புதல், திடக்கழிவு மேலாண்மை, காலி மனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, உள்ளிட்டவையும் காவல்துறை சார்பாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள், நில அபகரிப்பு மற்றும் மோசடி தொடர்பான புகார்கள் உள்ளிட்டவையும், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக பராமரிப்பு உதவி தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சுயதொழில் வங்கி கடன் உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக, நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு/புதுப்பித்தல், உதவித்தொகை /ஓய்வூதியம் உள்ளிட்டவையும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பாக, கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான விற்பனை பத்திரம், உள்ளிட்டவையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதறவற்றோருக்கான உதவி தொகை, புதுமைப்பெண் பெண் கல்வி உதவி திட்டம், உள்ளிட்டவையும் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, கல்வி உதவி தொகை, வீட்டுமனை இணைய வழிபட்ட உள்ளிட்டவையும், வாழ்வாதாரக் கடன் உதவிகள் சார்பாக, தாட்கோ கடன் உதவிகள், தாம்கோ / டாப் செட் கோ கடன் உதவிகள், கூட்டுறவு கடன் உதவிகள், மகளிர் சுய உதவி குழு கடன் உதவிகள், தொழில் முனைவோருக்கான கடன் உதவிகளும் வழங்கப்படும். மேற்கண்ட அரசு துறைகள் சார்பாக நிறைவேறாத குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் விதமாக, பொதுமக்கள் தங்கள் மனுக்களை இன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை, மிட்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளித்தனர். மேலும், முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகுதியற்ற மனுக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும், தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால், மாவட்ட ஊராட்சிகள் துறை செயலர் ஆப்தாபேகம், திமுக ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பாலாஜி. ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் வெண்ணிலா, அன்பு, கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், மஞ்சுளா. கவுன்சிலர்கள், குமரேசன், சாந்தி, உஷாராணி, தனலட்சுமி, திருமால், ஊராட்சி செயலர்கள், கிருபாகரன், மணிவண்ணன், செல்வி. திட்ட ஒருங்கிணைப்பாளர், முரளி, கோவிந்தராஜ், கேசவமூர்த்தி, மற்றும் காந்திமதி முன்னாள் எம். எல். ஏ கிருஷ்ணமூர்த்தி திமுகவை சார்ந்த லயோலா ராஜசேகர். உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.