அரசு பள்ளியில் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது

வாலிகண்டபுரம் அரசு பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-08-12 08:37 GMT
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது, பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் ஆசிரியர் முன்னாள் மாணவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், 1964 ஆம் ஆண்டு முதல் செயல்படும் இந்த முன்னாள் மாணவர் சங்கத்தில் , பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் என 500-க்கும் மேற்ப்பட்டோர் உறுப்பினராக இருந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்குத் தேவையான அனைத்து பொருள்கள், பண உதவிகள் செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு மாணவிகளுக்கு, முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 13 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில், அனைவரும் கலந்து கொண்டு தங்களது முன்னாள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை அழைத்து கௌரவித்து, பள்ளியில் படிக்கும் இளம் தலைமுறை மாணவ மாணவிகளுக்கு உற்சாகத்தை அளித்தனர், மேலும் பல்வேறு பாட பிரிவிலும், ஓவியம் கட்டுரை, சிறு கதை, உள்ளிட்ட போட்டிகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News