கரூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான், மற்றும் 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜிதொடங்கி வைத்து அதிவேக நடை போட்டியில் தானும் கலந்து கொண்டார். கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கம், அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில் சிஐஐ-ன் 2030 விஷன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கரூரில் மாரத்தான் போட்டி மற்றும் அதிவேக நடை போட்டி நடைபெற்றுது. கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் கலந்து கொண்டு நடந்து சென்றார். இந்த போட்டியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும்,இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்,டி.ஷர்ட் வழங்கப்பட்டது. போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசம், சான்றிதழும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.