கரூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கரூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கரூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சேவ் சைட் பவுண்டேஷன் கரூர் மற்றும் அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் அரசன் கண் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில், சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் விழித்திரை பரிசோதனை செய்யும் நடைபெற்றது. குறிப்பாக இந்த முகாம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்வதற்கும், உடல் பருமனாக இருப்பவர்களுக்கும், 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், அதிகப்பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், ஆறாத புண் போன்ற அறிகுறி உடையவர்களுக்கு இந்த முகாம் நடைபெற்றது. ஆரம்ப நிலையிலேயே விழித்திரை பாதிப்பை கண்டறிந்தால் பார்வை இழப்பு தடுக்க முடியும் எனவும் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லேசர் சிகிச்சை இங்கு அளிக்கப்படும் என முகாம் நடத்தியவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில் மருத்துவர்கள் பன்னீர்செல்வம், மதுஜா, வான்மதி, சுமதி ஆகியோர் நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்று பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொண்டனர்.