அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர் நிகழ்ச்சி

Update: 2024-08-13 15:43 GMT
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் பெரம்பலூரில் அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சிக்குட்பட்ட ராசி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அஞ்சல் துறை மூலம் தேசிய கொடி வழங்கல் மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகள் வெளியிடப்பட்டது. இதில் பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம், மாத்ரு வந்தனா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சுகாதார துறை, அஞ்சல் துறை, காசநோய் பிரிவு, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், முன்னோடி வங்கி போன்ற துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த கண்காட்சி இடம் பெற்றிருந்தது. கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் அம்பிகா, திருச்சி கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Similar News