பாலியல் புகாரை வாபஸ் பெற மிரட்டிய 2 பெண்கள் கைது

கருங்கல்

Update: 2024-11-24 05:15 GMT
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியை சேர்ந்தவர் ஜெர்சன் (28). ராணுவ வீரரான இவர் கடந்த ஜூன் மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது பக்கத்து ஊரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின்  பேரில் குளச்சல் மகளிர் போலீசார் ஜெர்சன் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த ஜெர்சன் தலைமறைவானார். அவர் ராணுவ பணிக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என தெரியவந்தது.        இந்த சூழலில் ஜெர்சனின் தாயார் விஜயகுமாரி (56) சகோதரி ஆன்சலின் (31) ஆகியோர் சிறுமி வீட்டினரிடம் சென்று புகாரை வாபஸ் பெற மிரட்டியதாக குளச்சல் மகளிர் போலீசில் மீண்டும் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் இரண்டு பேரையும்  போலீசார் கைது செய்து , தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News