சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சித்தனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மொபட்டில் மூட்டைகளுடன் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் பெரியபுதூர் பகுதியை ஆறுமுகம் (வயது 60) என்பதும், ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான ஆறுமுகம் பழைய சூரமங்கலம், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கோழி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.