வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி கோட்டை துவக்கப்பள்ளி, முதலைப்பட்டி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இளநகர் புனித தெரசாள் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களில் இன்று நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்டத்தில் 92.இராசிபுரம் (SC) சட்டமன்ற தொகுதியில்-261, 93.சேந்தமங்கலம் (ST) சட்டமன்ற தொகுதியில் – 284, 94..நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் – 290, 95. பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் - 254, 96.திருச்செங்கோடு – 261 மற்றும் 97.குமாரபாளையம் – 279 என மொத்தம் 1629 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 92.இராசிபுரம் (SC) சட்டமன்ற தொகுதியில் 1,12,566 - ஆண், 1,18,719 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் – 10, என மொத்தம் 2,31,295 வாக்காளர்களும், 93.சேந்தமங்கலம் (ST) சட்டமன்ற தொகுதியில் 1,19,929 ஆண், 1,25,950 பெண் வாக்காளர்கள், 31 மற்றவர்கள் என மொத்தம் 2,45,910 வாக்காளர்களும், 94..நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,24,875 ஆண், 1,34,681 பெண் வாக்காளர்கள், 54 மற்றவர்கள் என மொத்தம் 2,59,610 வாக்காளர்களும், 95..பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,05,878 ஆண், 1,15,441 பெண் வாக்காளர்கள், 10 மற்றவர்கள் என மொத்தம் 2,21,329 வாக்காளர்களும், 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,12,227 ஆண், 1,19,336 பெண் வாக்காளர்கள், 64 மற்றவர்கள் என மொத்தம் 2,31,627 வாக்காளர்களும், 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,26,063 ஆண், 1,33,107 பெண் வாக்காளர்கள், 77 மற்றவர்கள் என மொத்தம் 2,59,247 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளர்கள் 7,01,538, பெண் வாக்காளர்கள் 7,47,234 மற்றவர்கள் 246 என நிகர வாக்காளர்கள் 14,49,018 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்தில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 30.09.2007 வரை பிறந்தவர்கள், 01.04.2025, 01.07.2025 மற்றும் 01.10.2025 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-இல் விண்ணப்பிக்கலாம். அவர்களது பெயரானது 18 வயது நிரம்பியவுடன் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். மேலும் Voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், "Voter helpline" என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.