ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பால முருகனுக்கு அன்னாபிஷேகம்..

ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பால முருகனுக்கு அன்னாபிஷேகம்..

Update: 2024-11-16 13:48 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் சாமிக்கு ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தயிர் ,மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் ,இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் பழங்கள் மற்றும் அன்னத்தால் அன்னபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகரை வணங்கி சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Similar News